பாரீஸ் ஒலிம்பிக்: காலிறுதிக்கு முந்தின சுற்றுக்கு பிரனாய் முன்னேற்றம்

பாரீஸ் ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியின் அடுத்த சுற்றில் இந்திய வீரரான பிரனாயும், மற்றொரு இந்திய வீரரான லக்சயா சென்னும் விளையாட உள்ளனர்.;

Update:2024-08-01 01:13 IST

பாரீஸ்,

பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில், பேட்மிண்டன் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரரான எச்.எஸ். பிரனாய் மற்றும் வியட்நாம் நாட்டை சேர்ந்த டுக் பாட் லி ஆகியோர் விளையாடினர்.

இந்த போட்டியில், 16-21, 21-11, 21-12 என்ற செட் கணக்கில் லியை வீழ்த்தி, பிரனாய் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். அவர் காலிறுதிக்கு முந்தின சுற்றில், அடுத்து விளையாட உள்ளார்.

இந்த போட்டியில் இந்திய வீரரான பிரனாயும், மற்றொரு இந்திய வீரரான லக்சயா சென்னும் விளையாட உள்ளனர். இதில் சோகத்திற்குரிய விசயம் என்னவெனில், இந்திய வீரர் ஒருவர் நாளை போட்டியில் இருந்து வெளியேறுவார். எனினும், ஒருவர் காலிறுதிக்கு முன்னேறுவார்.

இதற்கு முன் நடந்த போட்டியில், இந்திய பேட்மிண்டன் நட்சத்திரங்களான பி.வி. சிந்து மற்றும் லக்சயா சென் இருவரும் முறையே மகளிர் மற்றும் ஆடவர் ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு முந்தின சுற்றுக்கு முன்னேறினர்.

Tags:    

மேலும் செய்திகள்