ஒலிம்பிக் திருவிழா 2024: ஒரு முன்னோட்டம்

33-வது ஒலிம்பிக் திருவிழா இந்த மாதம் நடைபெற உள்ளது.

Update: 2024-07-08 13:17 GMT

பாரீஸ்,

பழங்கால கிரேக்கத்தில் கி.மு. எட்டாம் நூற்றாண்டில் ஆரம்பித்தது, ஒலிம்பிக் விளையாட்டு. அங்கு ஒலிம்பியா என்ற இடத்தில் ஜியஸ் கடவுளுக்கு மரியாதை செலுத்தும் ஒரு விழாவாக இது கொண்டாடப்பட்டது. இதில் யுத்தத்துக்கு தயாராவதற்கு உதவக்கூடிய ஓட்டம், மல்யுத்தம், ஈட்டி எறிதல், குதிரையேற்றம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. பெண்களுக்கு அனுமதி இல்லை.

2-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் 1900-ம் ஆண்டில் நடந்தது. 24 நாடுகளைச் சேர்ந்த 997 வீரர், வீராங்கனைகள் 19 வகையான விளையாட்டுகளில் பங்கேற்றனர்.இந்த ஒலிம்பிக்கில் முதல்முறையாக பெண்கள் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர்.

இதனை தொடர்ந்து தற்போது 33-வது ஒலிம்பிக் திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரீசில் வரும் 26-ம்தேதி முதல் ஆகஸ்டு 11-ம்தேதி வரை நடைபெற உள்ளது.

பாரீஸ் ஒலிம்பிக்: ஜூலை 26-ல் தொடங்கும் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகள், ஆகஸ்ட் 11-ம் தேதி முடிவடையும். இதில், 16 விளையாட்டுகளில் சுமார் 112 இந்திய வீரர்கள், வீராங்கனைகள் களமிறங்குகிறார்கள். கடந்த 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் ஒரு தங்கம், இரண்டு வெள்ளி மற்றும் நான்கு வெண்கலம் அடங்கிய ஏழு பதக்கங்களை இந்தியா வென்ற நிலையில், இம்முறை அதைவிட கூடுதல் பதக்கங்களை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்