கவுகாத்தி மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: ரஜாவத் 2வது சுற்றுக்கு முன்னேற்றம்
முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் பிரியான்ஷு ரஜாவத், சக வீரரான ஆர்யா பிவ்பதகியுடன் மோதினார்.
கவுகாத்தி,
கவுகாத்தியில் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி கவுகாத்தியில் நடைபெற்று வருகிறது.இந்நிலையில், இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் பிரியான்ஷு ரஜாவத், சக வீரரான ஆர்யா பிவ்பதகியுடன் மோதினார்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் சிறப்பாக விளையாடி ரஜாவத் ஆதிக்கம் செலுத்தினார் . இதனால் 22-20, 21-14 என்ற புள்ளிக்கணக்கில் வென்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்