இந்தியாவின் 'தங்க மகன்' நீரஜ் சோப்ரா திருமணம்

நீரஜ் சோப்ராவுக்கு பல தரப்பினர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.;

Update:2025-01-20 07:46 IST
இந்தியாவின் தங்க மகன் நீரஜ் சோப்ரா திருமணம்

image courtesy: instagram/neeraj____chopra

புதுடெல்லி,

ஒலிம்பிக் தொடரில் ஈட்டி எறிதலில் வீரர் இரண்டு பதக்கம் (தங்கம், வெள்ளி) வென்றவரும், உலக சாம்பியனுமான இந்தியாவின் 'தங்க மகன்' நீரஜ் சோப்ராவுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. ஹிமானி மோர் என்ற பெண்ணை கரம்பிடித்துள்ள நீரஜ் ஜோடியாக இருக்கும் புகைப்படத்தை நேற்று சமூக வலைதளத்தில் பகிர்ந்தார். இது வைரலானது.

குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் இவர்களது திருமணம் நடைபெற்றுள்ளது. அவரது திடீர் திருமண அறிவிப்பு பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. ஹிமானி மோர் தற்போது அமெரிக்காவில் முதுகலை பட்டம் படித்து வருகிறார். இதனையொட்டி பல தரப்பினரும் நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.


Tags:    

மேலும் செய்திகள்