பாரீஸ் ஒலிம்பிக்: 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்ற அமெரிக்க வீரர்
பாரீஸ் ஒலிம்பிக் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் அமெரிக்கா தங்கப்பதக்கம் வென்றது.
பாரீஸ்,
2024ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. ஒலிம்பிக்கில் இன்று ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்த இறுதிப்போட்டி நடைபெற்றது.
இப்போட்டியில், இலக்கை 9.784 வினாடிகளில் அடைந்து முதலிடம் பிடித்த அமெரிக்க வீரர் நோஹா லைலீஸ் தங்கப்பதக்கம் வென்றார். இலக்கை 9.789 வினாடிகளில் அடைந்த ஜமைக்கா வீரர் தாம்சன் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றார். அதேவேளை, இலக்கை 9.810 வினாடிகளில் அடைந்த அமெரிக்க வீரர் கெர்லி 3ம் இடம்பிடித்து வெண்கலப்பதக்கம் வென்றார்.
முதல் இடம்பிடித்த நோஹாவுக்கு 2ம் இடம் பிடித்த தாம்சனுக்கும் இடையேயான இடைவெளி 0.005 வினாடிகளே என்பது குறிபிடத்தக்கது.