பாரீஸ் ஒலிம்பிக் டென்னிஸ்: வெண்கலப் பதக்கம் வென்றார் இகா ஸ்வியாடெக்

நேற்று நடைபெற்ற வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் இகா ஸ்வியாடெக், சுலோவேகியா வீராங்கனையுடன் மோதினார்.

Update: 2024-08-02 22:25 GMT

இகா ஸ்வியாடெக் (image courtesy: WTA twitter via ANI)

பாரீஸ்,

33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,714 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதில் டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று முன்தினம் நடைபெற்ற அரையிறுதி ஆட்டம் ஒன்றில் 'நம்பர் ஒன்' வீராங்கனை இகா ஸ்வியாடெக் (போலந்து), சீனாவின் ஜெங் கின்வென்னிடம் 2-6, 5-7 என்ற நேர் செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

இந்த நிலையில் நேற்று நடைபெற்ற வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் இகா ஸ்வியாடெக், சுலோவேகியா வீராங்கனை அன்னா கரோலினாவுடன் மோதினார். இந்த போட்டியில் ஸ்வியாடெக் 6-2, 6-1 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றினார். இதன்மூலம் இகா ஸ்வியாடெக் ஒலிம்பிக் டென்னிசில் பதக்கம் வென்ற முதல் போலந்து வீரர் என்ற சாதனையை படைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்