வினேஷ் போகத் தகுதி நீக்கத்தில் எந்த மாற்றமும் இல்லை.. சர்வதேச மல்யுத்த சங்கம் திட்டவட்டம்

Update: 2024-08-07 08:01 GMT
Live Updates - Page 2
2024-08-07 08:27 GMT

அனைவருக்கும் இது ஒரு பாடம்- ஹேமமாலினி

100 கிராம் அதிக எடையுடன் இருந்ததற்காக வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டது மிகவும் விசித்திரமாக இருக்கிறது என்று பா.ஜ.க. எம்பி. ஹேமமாலினி தெரிவித்துள்ளார். இதுபோன்ற விளையாட்டு பிரிவில் உள்ளவர்கள எடையை கட்டுக்குள் வைத்திருப்பது முக்கியம். இது நம் அனைவருக்கும் ஒரு பாடம் என்றும் ஹேமமாலினி கூறி உள்ளார்.

2024-08-07 08:19 GMT

வினேஷ் போகத் மருத்துவமனையில் அனுமதி

நீர்ச்சத்து குறைபாடு காரணமாக இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உடல் எடையை குறைக்க சாப்பிடாமல் இரவு முழுவதும் உடற்பயிற்சி செய்ததால் நீர்ச்சத்து குறைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. 

2024-08-07 08:13 GMT

வினேஷ் போகத் முன் உள்ள வாய்ப்புகள் என்ன? - கேட்டறிந்தார் மோடி

மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் முன் உள்ள வாய்ப்புகள் குறித்து இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் பி.டி.உஷாவிடம் பிரதமர் மோடி தொலைபேசியில் கேட்டறிந்தார்.

வினேஷ் போகத்திற்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும். தகுதி நீக்கத்திற்கு இந்தியா கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. 

2024-08-07 08:13 GMT

கடந்த ஒலிம்பிக்கில் 53 கிலோ எடைப்பிரிவில் விளையாடிய வினேஷ் போகத், இந்த முறை உடல் எடைடைய குறைத்து 50 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்றார். உடல் எடையை குறைப்பதற்காக வினேஷ் போகத் உணவை குறைத்துள்ளார். இதுதவிர கடுமையான பயிற்சிகளையும் செய்துள்ளார். நேற்று இரவு சரியாக தூங்காமல் பயிற்சி செய்துள்ளார். உடல் எடையை நிர்ணயிக்கப்பட்ட அளவுக்குள் கொண்டு வருவதற்கு தன்னால் முடிந்த அனைத்தையும் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. இந்திய அதிகாரிகளும் ஒலிம்பிக் கமிட்டியிடம் கூடுதல் அவகாசம் கேட்டனர். ஆனால் இந்த முயற்சிகள் வீணாகின.

இன்று காலையில் எடையை சோதனை செய்தபோது வினேஷ் வெறும் 100 கிராம் அதிக எடையுடன் காணப்பட்டதாக இந்திய பயிற்சியாளர் தெரிவித்தார். இந்த விளிம்பு சிறியதாக இருந்தாலும், ஒலிம்பிக் விதிமுறையில் விதிவிலக்கு எதுவும் இல்லாததால் போட்டியில் இருந்து அவர் வெளியேற்றப்பட்டுள்ளார்.

2024-08-07 08:04 GMT

வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக மத்திய விளையாட்டுத் துறை மந்திரி மன்சுக் மாண்டவியா பிற்பகல் 3 மணிக்கு மக்களவையில் விளக்கம் அளிக்கிறார்.

2024-08-07 08:04 GMT

100 கிராம் எடை கூடுதலாக இருக்கும் காரணத்தை சுட்டிக்காட்டி வினேஷ் போகத் தகுதிநீக்கம் செய்யப்பட்டிருப்பது இந்திய ரசிகர்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்