பாரீஸ் ஒலிம்பிக்: இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் இன்றைய போட்டிகள்
33-வது பாரீஸ் ஒலிம்பிக் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது.
பாரீஸ்,
33-வது ஒலிம்பிக் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இறுதிகட்டத்தை எட்டிவிட்ட இந்த தொடரில் இந்தியா இதுவரை 6 பதக்கங்கள் (1 வெள்ளி, 5 வெண்கலம்) வென்றுள்ளது. இந்நிலையில் இந்திய வீரர், வீராங்கனைகள் இன்று எந்தெந்த போட்டிகளில் களமிறங்குகின்றனர் என்பதை காணலாம்.
கோல்ப்:- அதிதி அசோக், தீக்ஷா தாகர் (பெண்கள் பிரிவு இறுதி சுற்று), பகல் 12.30 மணி.
மல்யுத்தம்:- ரீத்திகா ஹூடா (இந்தியா)- நாகி பெர்னாடெட் (ஹங்கேரி) (பெண்கள் பிரீஸ்டைல் 76 கிலோ எடைபிரிவு தொடக்க சுற்று), மாலை 3 மணி.