பாரீஸ் ஒலிம்பிக்: இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் இன்றைய போட்டிகள்

பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

Update: 2024-08-09 01:11 GMT

பாரீஸ்,

பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலமாக நடைபெற்று வருகின்றன. பல்வேறு நாட்டு வீரர், வீராங்கனைகள் அபாரமான திறமையை வெளிப்படுத்தி பதக்க வேட்டைகளை நடத்தி வருகின்றனர். தற்போது வரை போட்டிகளின் முடிவில் பதக்கப் பட்டியலில் அமெரிக்க முதலிடத்தை பிடித்துள்ளது.

அதன்படி, 30 தங்கம், 38 வெள்ளி மற்றும் 35 வெண்கல பதக்கங்களுடன் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. 29 தங்கம் உட்பட 73 பதக்கங்களுடன் சீனா இரண்டாவது இடத்திலும், 18 தங்கம் உட்பட 45 பதக்கங்களுடன் ஆஸ்திரேலியா 3வது இடத்திலும் உள்ளது. இந்தியா ஒரு வெள்ளி, 4 வெண்கல பதக்கங்களுடன் 64வது இடத்தை பிடித்துள்ளது.

இந்நிலையில் இந்திய வீரர், வீராங்கனைகள் இன்று எந்தெந்த போட்டிகளில் களமிறங்குகின்றனர் என்பதை காணலாம்..!

தடகளம்:- ஜோதிகா ஸ்ரீ தண்டி, சுபா வெங்கடேசன், வித்யா ராம்ராஜ், பூவம்மா (பெண்களுக்கான 4x400 மீட்டர் தொடர் ஓட்டம் முதல் சுற்று), பிற்பகல் 2.10 மணி. முகமது அனாஸ், முகமது அஜ்மல், அமோஜ் ஜேக்கப், ஆரோக்ய ராஜீவ் (ஆண்களுக்கான 4x400 மீட்டர் தொடர் ஓட்டம் முதல் சுற்று), பிற்பகல் 2.35 மணி.

மல்யுத்தம்:- அமன் ஷெராவத் (இந்தியா)- டேரியன் கிரஸ் (பியூர்டோரிகோ), (ஆண்கள் 57 கிலோ எடைபிரிவு பிரீஸ்டைல் வெண்கலப்பதக்கத்துக்கான போட்டி), இரவு 10 45 மணி.

Tags:    

மேலும் செய்திகள்