ஒலிம்பிக்: பேட்மிண்டன் இரட்டையர் பிரிவில் சாத்விக்-சிராக் ஜோடி வெற்றி

ஒலிம்பிக் போட்டியின் பேட்மிண்டன் இரட்டையர் பிரிவில் சாத்விக்-சிராக் ஜோடி வெற்றிபெற்றுள்ளது.;

Update:2024-07-30 20:21 IST

பாரீஸ்,

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இன்று நடந்த துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவின் மனு பாக்கர், சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கலம் வென்று அசத்தியது.

இந்நிலையில், பேட்மிண்டனில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி, இந்தோனேசியாவின் பஜர் அல்பியான்- முகமது ரியான் அர்டியாண்டோ ஜோடியுடன் மோதியது. 38 நிமிடங்கள் நீடித்த போட்டியில் இந்திய ஜோடி 21-13 , 21-13 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்று சி பிரிவில் முதலிடம் பிடித்து அசத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்