பாரீஸ் ஒலிம்பிக்: பதக்க பட்டியலில் இந்தியாவுக்கு மேலே சென்ற பாகிஸ்தான்

ஒலிம்பிக் தொடரின் பதக்க பட்டியல் தங்கப் பதக்கத்தின் அடிப்படையிலேயே வரிசைப்படுத்தப்படும்.

Update: 2024-08-09 07:58 GMT

image courtesy: PTI

பாரீஸ்,

பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலமாக நடைபெற்று வருகின்றன. பல்வேறு நாட்டு வீரர், வீராங்கனைகள் அபாரமான திறமையை வெளிப்படுத்தி பதக்க வேட்டைகளை நடத்தி வருகின்றனர்.

ஒலிம்பிக் தொடரின் பதக்கப் பட்டியல் தங்கப் பதக்கத்தின் அடிப்படையிலேயே வரிசைப்படுத்தப்படும். அதற்கு அடுத்து வெள்ளிப் பதக்கம் மற்றும் வெண்கல பதக்கங்களின் அடிப்படையில் வரிசைப்படுத்தப்படும்.

அதன்படி, 30 தங்கம், 38 வெள்ளி மற்றும் 35 வெண்கல பதக்கங்களுடன் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. 29 தங்கம் உட்பட 73 பதக்கங்களுடன் சீனா இரண்டாவது இடத்திலும், 18 தங்கம் உட்பட 45 பதக்கங்களுடன் ஆஸ்திரேலியா 3வது இடத்திலும் உள்ளது.

இந்தியா ஒரு வெள்ளி, 4 வெண்கல பதக்கங்களுடன் 64வது இடத்தை பிடித்துள்ளது. அதேசமயம், பாகிஸ்தான் ஒரே ஒரு தங்க பதக்கத்தை வென்று ஐந்து பதக்கம் வென்ற இந்தியாவை முந்தி உள்ளது.

இதுவரை இந்தியா 4 வெண்கல பதக்கங்கள் மற்றும் ஒரு வெள்ளி பதக்கம் வென்றுள்ளது. ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா ஒரு வெள்ளி பதக்கம் வென்றார். துப்பாக்கி சுடுதலில் இந்தியா 3 வெண்கல பதக்கங்களை வென்றது. ஆக்கியில் மற்றொரு வெண்கலப் பதக்கம் கிடைத்தது. இதை அடுத்து 5 பதக்கங்களுடன் இந்தியா 64வது இடத்தில் உள்ளது.

அதே சமயம் பாகிஸ்தான் இந்த ஒலிம்பிக் தொடரில் ஒரே ஒரு தங்க பதக்கம் மட்டுமே வென்று உள்ளது. வேறு எந்த பதக்கமும் வெல்லவில்லை. ஈட்டி எறிதலில் பாகிஸ்தானின் அர்ஷத் நதீம் தங்கப் பதக்கம் வென்றார். அதன் மூலம் பாகிஸ்தான் அணி பதக்க பட்டியலில் இந்தியாவை முந்தி 53-வது இடத்தில் உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்