பாரீஸ் ஒலிம்பிக்: பேட்மிண்டன் அரையிறுதியில் லக்சயா சென் அதிர்ச்சி தோல்வி

அரையிறுதியில் தோல்வியடைந்த லக்சயா சென் வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் லீ ஜியா உடன் மோதுகிறார்.;

Update:2024-08-04 17:04 IST

பாரீஸ்,

பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் பேட்மிண்டன் போட்டியின் அரையிறுதியில் லக்சயா சென் (இந்தியா) - விக்டர் ஆக்சல்சென் (டென்மார்க்) உடன் பலப்பரீட்சை நடத்தினார்.

இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய விக்டர் 22-20 மற்றும் 21-14 என்ற நேர் செட் கணக்கில் லக்சயா சென்னுக்கு அதிர்ச்சி அளித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

தோல்வியடைந்த லக்சயா சென் வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் லீ ஜியா உடன் மோதுகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்