பாரீஸ் ஒலிம்பிக்: கலப்பு இரட்டையர் பிரிவு துப்பாக்கி சுடுதலில் இந்திய அணி ஏமாற்றம்

சீனா முதலிடத்தையும், தென் கொரியா 2-வது இடத்தையும் பிடித்து தங்கம் மற்றும் வெள்ளி பதக்கத்துக்கான போட்டியில் மோதுகின்றன.

Update: 2024-07-27 08:01 GMT

image courtesy: PTI

பாரீஸ்,

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான 'ஒலிம்பிக்'போட்டி பாரீஸ் நகரில் நேற்று கோலாகலமாக தொடங்கியது.

இதில் 2-வது நாளான இன்று மொத்தம் 14 தங்கப்பதக்கங்களுக்கு போட்டிகள் நடக்கின்றன. பாரீஸ் ஒலிம்பிக்கின் முதல் சாம்பியனை நிர்ணயிக்கும் போட்டியாக துப்பாக்கி சுடுதலில் 10 மீட்டர் ஏர்ரைபிள் கலப்பு அணிகள் பிரிவு அமைந்துள்ளது.

இதன் தகுதி சுற்று இந்திய நேரப்படி பகல் 12. 30 மணிக்கு நடைபெற்றது. இதில் இந்திய தரப்பில் ரமிதா-அர்ஜூன் பாபுதா மற்றும் இளவேனில்-சந்தீப்சிங் ஆகிய ஜோடிகள் களம் இறங்கின.

இந்த தகுதி சுற்றில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் மட்டுமே பதக்கங்களுக்கான போட்டிக்கு முன்னேற முடியும் என்ற நிலையில், இந்தியாவின் ரமிதா-அர்ஜூன் பாபுதா இணை 6-வது இடத்தையும், இளவேனில்-சந்தீப்சிங் ஜோடி 12-வது இடத்தையும் பிடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியாமல் வெளியேறி ஏமாற்றம் அளித்தன.

இதில் சீனா முதலிடத்தையும், தென் கொரியா 2-வது இடத்தையும் பிடித்து தங்கம் மற்றும் வெள்ளி பதக்கத்துக்கான போட்டியில் மோதுகின்றன.

3-வது மற்றும் 4-வது இடங்களை பிடித்த கஜகஸ்தான் மற்றும் ஜெர்மனி வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் மோதுகின்றன. இறுதிப்போட்டி இந்திய நேரப்படி மாலை 4 மணியளவில் நடைபெற உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்