பாரீஸ் ஒலிம்பிக்: துப்பாக்கி சுடுதல் இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை தோல்வி
துப்பாக்கி சுடுதல் இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை ரமிதா ஜிண்டால் தோல்வியடைந்துள்ளார்.
பாரீஸ்,
உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான பாரீஸ் ஒலிம்பிக்கில் 206 நாடுகளை சேர்ந்த 10,500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்திய தரப்பில் 117 பேர் பாரீஸ் ஒலிம்பிக்குக்கு சென்றுள்ளனர்.
பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் 4-வது நாளான இன்று நடைபெற்ற பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் இறுதிப்போட்டிக்கு இந்திய வீராங்கனை ரமிதா ஜிண்டால் தகுதி பெற்றிருந்தார்.
8 வீராங்கனைகள் பங்கேற்றிருந்த இந்த போட்டியில் ரமிதா ஜிண்டால் 145.3 புள்ளிகளுடன் 7-வது இடத்தை பிடித்து தோல்வியை தழுவினார்.