பாரீஸ் ஒலிம்பிக் ஆக்கி: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா வெற்றி

பாரீஸ் ஒலிம்பிக் ஆக்கி தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

Update: 2024-08-02 13:04 GMT

பாரீஸ்,

33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,714 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இதில் 8-வது நாளான இன்று நடைபெற்ற ஆக்கி போட்டியில் ஏற்கனவே காலிறுதி வாய்ப்பை உறுதி செய்த இந்திய அணி தனது 5-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுடன் மோதியது.

இதில் தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடிய இந்திய அணி முதல் பாதியிலேயே 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. இதனையடுத்து நடைபெற்ற பிற்பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் தலா 1 கோல் அடித்தன. இதனால் இந்திய அணி 3-2 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி லீக் சுற்றை வெற்றியுடன் நிறைவு செய்துள்ளது.

இந்திய அணி தரப்பில் ஹர்மன்ப்ரீத் சிங் 2 கோல்களும், அபிஷேக் 1 கோலும் அடித்தனர். ஆஸ்திரேலியா தரப்பில் தாமஸ் கிரெய்க் மற்றும் பிளேக் கவர்ஸ் தலா 1 கோல் அடித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்