பாரீஸ் ஒலிம்பிக்: முதல் ஆட்டத்தில் தோல்வி கண்ட அஷ்வினி பொன்னப்பா இணை

அஷ்வினி பொன்னப்பா இணை, கொரியாவின் கிம் சோ யோங் - காங் ஹீ யோங் இணை உடன் மோதியது.

Update: 2024-07-27 23:27 GMT

Image Courtesy: AFP 

பாரீஸ்,

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான 'ஒலிம்பிக்' போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த தொடரில் நேற்று நடைபெற்ற பேட்மிண்டன் விளையாட்டில் பெண்கள் இரட்டையர் பிரிவின் லீக் ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் தனிஷா க்ராஸ்டோ - அஷ்வினி பொன்னப்பா இணை, கொரியாவின் கிம் சோ யோங் - காங் ஹீ யோங் இணை உடன் மோதியது.

இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கிம் சோ யோங் - காங் ஹீ யோங் இணை 21-18, 21-10 என்ற செட் கணக்கில் தனிஷா க்ராஸ்டோ - அஷ்வினி பொன்னப்பா இணையை வீழ்த்தியது.

தனிஷா க்ராஸ்டோ - அஷ்வினி பொன்னப்பா இணை தனது அடுத்த லீக் ஆட்டத்தில் ஜப்பானின் நமி மட்சுயாமா - ஷிஹாரு ஷிடா இணை உடன் மோத உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்