பாரீஸ் ஒலிம்பிக்: இந்தியாவுக்கு முதல் பதக்கம் - வெண்கலம் வென்றார் மனு பாக்கர்

பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் கிடைத்துள்ளது.

Update: 2024-07-28 10:35 GMT

பாரீஸ்,

2024ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. நேற்று முன் தினம் பாரீஸ் ஒலிம்பிக் கோலாகலமாக தொடங்கியது. இதையடுத்து நேற்று முதல் போட்டிகள் தொடங்கின.

இந்நிலையில், பாரீஸ் ஒலிம்பிக்கின் 2வது நாளான இன்று பெண்கள் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கி சுடுதல் பிரிவு இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் இந்தியாவின் மனு பாக்கர் (வயது 22) பங்கேற்றார்.

பரபரப்பாக நடந்த ஆட்டத்தில் மனு பாக்கர் 3ம் இடம்பிடித்து வெண்கலப்பதக்கம் வென்றார். இதன் மூலம் பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் கிடைத்துள்ளது.

பெண்கள் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கி சுடுதல் பிரிவு இறுதிப்போட்டியில் மனு பாக்கர் 221.7 புள்ளிகள் பெற்று 3ம் இடம் பிடித்தார். இதன் மூலம் மனு பாக்கர் வெண்கலப்பதக்கம் வென்றார்.

ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதல் பிரிவில் 12 ஆண்டுகளுக்குப்பின் முதல் முறையாக இந்தியா பதக்கம் வென்றுள்ளது. அதேபோல் ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு பதக்கம் வென்ற முதல் பெண் என்ற பெருமையையும் மனு பாக்கர் பெற்றுள்ளார்.  ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மனு பாக்கருக்கு அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்