பாரீஸ் ஒலிம்பிக்: துடுப்பு படகு போட்டியில் இந்திய வீரர் காலிறுதிக்கு முன்னேற்றம்
துடுப்பு படகு போட்டியில் இந்திய வீரர் காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
பாரீஸ்,
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில், துடுப்பு படகு போட்டி ஆண்கள் ஒற்றையர் ஸ்கல்ஸ் ரீபிச்சஷ் சுற்று இன்று நடைபெற்றது.
இப்போட்டியில் இந்திய வீரர் பல்ராஜ் பன்வர் பங்கேற்றார். பரபரப்பாக நடந்த இப்போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை இந்திய வீரர் பல்ராஜ் பன்வர் 7 நிமிடம் 12 வினாடிகளில் கடந்து தனது பிரிவில் 2வது இடம் பிடித்தார். 3 பிரிவுகளாக நடந்த இப்போட்டியில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் வீரர்கள் காலிறுதி சுற்றுக்கு முன்னேறுவர். அதன்படி, துடுப்பு படகு போட்டியில் 2வது இடம் பிடித்த இந்திய வீரர் பல்ராஜ் அடுத்த சுற்றான காலிறுதிக்கு முன்னேறினார்.