பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்தம்; நிஷா தஹியா காலிறுதியில் தோல்வி

காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் நிஷா தஹியா, வட கொரியாவின் பாக்சோல் ஆகியோர் மோதினர்.

Update: 2024-08-05 15:44 GMT

Image Courtesy: AFP 

பாரீஸ்,

33-வது ஒலிம்பிக் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த தொடரில் இன்று நடைபெற்ற பெண்களுக்கான மல்யுத்த போட்டியில் 68 கிலோ எடைப் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் நிஷா தஹியா, வட கொரியாவின் பாக்சோல் ஆகியோர் மோதினர்.

இந்த ஆட்டத்தில் கடுமையாக போராடிய நிஷா தஹியா 8-10 என்ற புள்ளிக்கணக்கில் வட கொரியாவின் பாக்சோல்கத்திடம் தோல்வி கண்டு தொடரில் இருந்து வெளியேறினார். 

Tags:    

மேலும் செய்திகள்