பாரீஸ் ஒலிம்பிக் ஜூடோ: இந்திய வீராங்கனை துலிகா மான் தோல்வி

பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் ஜூடோ வீராங்கனை துலிகா மான் தோல்வியடைந்துள்ளார்.;

Update:2024-08-02 15:47 IST

பாரீஸ்,

33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,714 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இதில் 8-வது நாளான இன்று நடைபெற்ற ஜூடோ பெண்கள் (78 கிலோவுக்கு மேல் எடைபிரிவு) முதல் சுற்று போட்டியில் இந்திய வீராங்கனை துலிகா மான் , கியூபா வீராங்கனை ஐடலிஸ் ஓர்டிஸ் உடன் மோதினார்.

இதில் வெறும் 28 நிமிடங்களிலேயே துலிகா மான் 0-10 என்ற கணக்கில் தோல்வியடைந்து ஏமாற்றம் அளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்