பாரீஸ் ஒலிம்பிக் கால்பந்து; பிரான்சை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்ற ஸ்பெயின்

பாரீஸ் ஒலிம்பிக் கால்பந்து தொடரின் இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் - ஸ்பெயின் அணிகள் மோதின.

Update: 2024-08-09 20:30 GMT

image courtesy: AFP

பாரீஸ்,

33-வது  ஒலிம்பிக் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான கால்பந்து தொடரின் இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் - ஸ்பெயின் அணிகள் மோதின.

ஆட்டத்தின் முதல் பாதியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்பெயின் 3 கோல்களை அடித்து அசத்தியது. இதன் காரணமாக முதல் பாதி ஆட்டத்தில் ஸ்பெயின் 3-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. தொடர்ந்து நடைபெற்ற 2வது பாதி ஆட்டத்தின் பிரான்ஸ் வீரர்கள் தீவிர ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இதன் காரணமாக 2வது பாதி ஆட்டத்தில் அந்த அணி 2 கோல்களை அடித்தது. இதன் காரணமாக ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் தலா 3 கோல்கள் அடித்திருந்தன. இதையடுத்து வெற்றியாளரை தீர்மானிக்க கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது.

கூடுதல் நேரத்தில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்பெயின் வீரர்கள் மேலும் இரண்டு கோல்கள் அடித்தனர். இறுதியில் 5-3 என்ற கோல் கணக்கில் பிரான்சை வீழ்த்தி ஸ்பெயின் அணி தங்கப்பதக்கத்தை வென்றது. பிரான்ஸ் அணிக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.

பிரான்ஸ் தரப்பில் என்ஸோ மில்லோட் (11வது நிமிடம்), மேக்னஸ் அக்லியோச்சே (79வது நிமிடம்), ஜீன்-பிலிப் மாடெட்டா (90+3வது நிமிடம்) தலா ஒரு கோல் அடித்தனர். ஸ்பெயின் தரப்பில் பெர்மின் லோபஸ் (18 மற்றும் 25வது நிமிடம்), செர்ஜியோ அமெல்லோ (100 மற்றும் 120+1வது நிமிடம்) ஆகியோர் தலா 2 கோலும், அலெக்ஸ் பேனா (28வது நிமிடம்) ஒரு கோலும் அடித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்