பாரீஸ் ஒலிம்பிக் கால்பந்து: காலிறுதியில் அர்ஜென்டினா அதிர்ச்சி தோல்வி
பாரீஸ் ஒலிம்பிக் தொடரின் காலிறுதி ஆட்டத்தில் அர்ஜென்டினா - பிரான்ஸ் அணிகள் மோதின.;
பாரீஸ்,
பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் ஆண்கள் கால்பந்து போட்டியின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் அர்ஜென்டினா மற்றும் பிரான்ஸ் அணிகள் மோதின.
தொடக்கம் முதலே அனல் பறந்த இந்த ஆட்டத்தில் பிரான்ஸ் 1-0 என்ற கோல் கணக்கில் திரில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. அந்த அணி அரையிறுதியில் எகிப்துடன் பலப்பரீட்சை நடத்த உள்ளது. பிரான்ஸ் தரப்பில் ஜீன் பிலிப் வெற்றிக்குரிய அந்த கோலை அடித்தார்.
இந்த அதிர்ச்சி தோல்வி மூலம் முன்னாள் ஒலிம்பிக் சாம்பியனான அர்ஜென்டினா நடப்பு தொடரில் காலிறுதியுடன் வெளியேறியுள்ளது.