பாரீஸ் ஒலிம்பிக் பேட்மிண்டன்: காலிறுதியில் இந்தியாவின் சாத்விக் - சிராக் இணை அதிர்ச்சி தோல்வி

ஆண்கள் பேட்மிண்டன் இரட்டையர் பிரிவு காலிறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் சாத்விக் - சிராக் ஜோடி மலேசியாவின் ஆரோன் சியா- வூ யிக் சோ இணையுடன் மோதியது.

Update: 2024-08-01 13:54 GMT

image courtesy: AFP

பாரீஸ்,

33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,714 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

7-வது நாளான இன்று நடைபெற்ற ஆண்கள் பேட்மிண்டன் இரட்டையர் பிரிவு காலிறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி- சிராக் ஷெட்டி ஜோடி மலேசியாவின் ஆரோன் சியா- வூ யிக் சோ இணையுடன் மோதியது.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த மோதலில் முதல் செட்டை இந்திய இணை கைப்பற்றியது. ஆனால் அடுத்த 2 செட்டுகளையும் மலேசியா இணை கைப்பற்றி வெற்றி பெற்றது. 1 மணி நேரம் 4 நிமிடங்கள் நடைபெற்ற இந்த மோதலில் மலேசிய இணை 13-21, 21-14 மற்றும் 21-16 என்ற செட் கணக்கில் இந்தியாவின் சாத்விக் - சிராக் ஜோடிக்கு அதிர்ச்சி அளித்து அரையிறுதிக்கு முன்னேறியது.

இந்த அதிர்ச்சி தோல்வியின் மூலம் சாத்விக் - சிராக் இணையின் ஒலிம்பிக் பதக்க கனவு முடிவடைந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்