ஒலிம்பிக்; 4 x 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் இறுதிப்போட்டிக்கு முன்னேறாமல் வெளியேறிய இந்திய அணிகள்

33-வது பாரீஸ் ஒலிம்பிக் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது.

Update: 2024-08-09 21:15 GMT

image courtesy: AFP

பாரீஸ்,

33-வது ஒலிம்பிக் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் தடகளத்தில் நேற்று நடைபெற்ற 4 x 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் இந்திய அணிகள் (ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள்) கலந்து கொண்டன.

இதில் பெண்களுக்கான தொடர் ஓட்டத்தில் ஜோதிகா ஸ்ரீ தண்டி, பூவம்மா, வித்யா ராம்ராஜ், சுபா வெங்கடேசன் ஆகியோர் அடங்கிய இந்திய அணி கலந்து கொண்டது. இந்த அணி 3 நிமிடம் 32.51 வினாடியில் இலக்கை கடந்தது. மொத்தம் 16 அணிகள் கலந்து கொண்ட தகுதி சுற்றில் இந்திய அணி 15-வது இடம் பிடித்தது. இதன் மூலம் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இந்திய அணி இழந்தது.

இதேபோல் ஆண்களுக்கான தொடர் ஓட்டத்தில் அமோஜ் ஜேக்கப், ராஜேஷ், முகமது அஜ்மல், முகமது அனாஸ் ஆகியோர் அடங்கிய இந்திய அணி கலந்து கொண்டது. இந்த அணி 3 நிமிடம் 00.58 வினாடியில் பந்தய தூரத்தை கடந்தது. மொத்தம் 16 அணிகள் கலந்து கொண்ட தகுதி சுற்றில் இந்திய அணி 10-வது இடம் பிடித்தது. இதன் மூலம் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.

இதன் மூலம் 4 x 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் இந்திய அணிகள் (ஆண்கள் மற்றும் பெண்கள்) இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை இழந்து வெளியேறின. 

Tags:    

மேலும் செய்திகள்