ஒலிம்பிக் குத்துச்சண்டை: காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு நிகாத் ஜரீன் தகுதி

ஒலிம்பிக் மகளிர் குத்துச்சண்டை போட்டியில் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு நிகாத் ஜரீன் தகுதி பெற்றுள்ளார்.

Update: 2024-07-28 12:09 GMT

Image Courtesy : AFP

பாரீஸ்,

33-வது ஒலிம்பிக் விளையாட்டு திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நேற்று முன்தினம் இரவு கோலாகலமாக தொடங்கியது. இதில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இதில் இந்தியாவை சேர்ந்த 117 வீரர்களும் அடங்குவர். இந்நிலையில் இன்று நடைபெற்ற மகளிர் 50 கிலோ முதல்நிலை குத்துச்சண்டை போட்டியின் ரவுண்ட் ஆப் 32 சுற்றில் இந்திய வீராங்கனை நிகாத் ஜரீன், ஜெர்மனி வீராங்கனை மேக்சி கரீனாவுடன் மோதினார்.

இதில் நிகாத் ஜரீன் 5-0 என்ற புள்ளி கணக்கில் மேக்சி கரீனாவை வீழ்த்தி வெற்றி பெற்றார். இதன் மூலம் காலிறுதிக்கு முந்தைய சுற்றான ரவுண்ட் ஆப் 16 சுற்றுக்கு நிகாத் ஜரீன் தகுதி பெற்றுள்ளார். வரும் ஆகஸ்ட் 1-ந்தேதி நடைபெறும் இந்த போட்டியில் சீன வீராங்கனை வூ யூவுடன் நிகாத் ஜரீன் மோத உள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்