ஒலிம்பிக் 4 x 400 மீட்டர் தொடர் ஓட்டம்; தங்கப் பதக்கங்களை வென்ற அமெரிக்கா

4 x 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் (ஆண்கள் மற்றும் பெண்கள் அணி) அமெரிக்கா தங்கப் பதக்கங்களை வென்று அசத்தியுள்ளது.

Update: 2024-08-10 22:05 GMT

Image Courtesy : AFP

பாரீஸ்,

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் 4 x 400 மீட்டர் தொடர் ஓட்டத்தின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில் அபாரமாக செயல்பட்ட அமெரிக்க அணி (கிறிஸ்டோபர் பெய்லி, வெர்னான் நார்வூட், பிரைஸ் டெட்மன், ராய் பெஞ்சமின்) 2 நிமிடம் 54:43 வினாடியில் இலக்கை எட்டி தங்கப்பதக்கத்தை வென்றது.

இதில் போட்ஸ்வானா அணி (2 நிமிடம் 54:53 வினாடி) வெள்ளிப்பதக்கமும், பிரிட்டன் அணி (2 நிமிடம் 55:83 வினாடி) வெண்கலப்பதக்கமும் வென்றது. இந்த போட்டியை தொடர்ந்து பெண்களுக்கான 4 x 400 மீட்டர் தொடர் ஓட்டத்தின் இறுதிப்போட்டியும் நடைபெற்றது.


 



இந்த போட்டியிலும் அமெரிக்க அணி (ஷமியர் லிட்டில், சிட்னி மெக்லாக்லின்-லெவ்ரோன், கேப்ரியல் தாமஸ், அலெக்சிஸ் ஹோம்ஸ்) 3 நிமிடம் 15:27 வினாடியில் இலக்கை கடந்து தங்கப்பதக்கத்தை வென்றது. இதில் நெதர்லாந்து அணி ( 3 நிமிடம் 19:50 வினாடி) வெள்ளிப்பதக்கமும், பிரிட்டன் அணி (3 நிமிடம் 19:72 வினாடி) வெண்கலப்பதக்கமும் வென்றது.

இதையடுத்து 4 x 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் (ஆண்கள் மற்றும் பெண்கள் அணி) அமெரிக்க அணி இரண்டு தங்கப்பதக்கங்களை வென்று அசத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்