ஒலிம்பிக் போட்டிகளை பார்ப்பதற்காக அமைச்சர் உதயநிதி பிரான்ஸ் பயணம்

தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகளை சந்தித்து, ஊக்கப்படுத்தும் வகையிலும் அமைச்சர் பயணம் மேற்கொண்டுள்ளார்.

Update: 2024-08-08 12:20 GMT

சென்னை,

பாரீசில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளை நேரில் கண்டு ரசிப்பதற்காக விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பிரான்ஸ் சென்றுள்ளார். தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் சந்தித்து, ஊக்கப்படுத்தும் வகையிலும் இப்பயணம் மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இருந்து மட்டும் 11 வீரர், வீராங்கனைகள் மற்றும் 6 மாற்று திறனாளிகள் உள்பட மொத்தம் 17 பேர் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கிறார்கள். ஒலிம்பிக் போட்டியை பார்வையிடவும் தமிழக வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் விளையாட்டு நிகழ்ச்சிகளை நேரில் பார்க்கவும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அரசு துறை அதிகாரிகளுடன் பாரீஸ் சென்றுள்ளார். பிரான்ஸ் நாட்டில் 6 நாட்கள் தங்கி இருக்கும் அவர் 14-ந்தேதி சென்னை திரும்புவார் என தெரிகிறது.

 

Tags:    

மேலும் செய்திகள்