பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்திய வீரர்கள் பங்கேற்கும் இன்றைய போட்டிகளின் முழு விவரம்
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவை சேர்ந்த 117 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
பாரீஸ்,
33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. 206 நாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள இந்த விளையாட்டு திருவிழா இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது.
ஒலிம்பிக் போட்டியில் இன்று இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் போட்டிகள் (இந்திய நேரப்படி):-
தடகளம்:- சுரஜ் பன்வார், பிரியங்கா கோஸ்வாமி (மாரத்தான் நடைபந்தயம் கலப்பு அணிகள் பிரிவு), காலை 11 மணி. சர்வேஷ் குஷாலே (ஆண்கள் உயரம் தாண்டுதல் தகுதி சுற்று), பிற்பகல் 1.35 மணி. ஜோதி யர்ராஜி (பெண்கள் 100 மீட்டர் தடை ஓட்டம் தகுதி சுற்று), பிற்பகல் 1 45 மணி. அப்துல்லா, பிரவீன் சித்ரவேல் ( ஆண்கள் டிரிபிள்ஜம்ப் தகுதி சுற்று), இரவு 10 45 மணி. அவினாஷ் சாப்லே (ஆண்கள் 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள்சேஸ் இறுதி சுற்று), நள்ளிரவு 1.13 மணி.
கோல்ப்:- அதிதி அசோக், தீக்ஷா தாகர் (பெண்கள் பிரிவு முதல் சுற்று), பகல் 12 30 மணி.
டேபிள் டென்னிஸ்:- இந்தியா- ஜெர்மனி (பெண்கள் அணிகள் பிரிவு கால்இறுதி ஆட்டம்), பிற்பகல் 1 30 மணி.
மல்யுத்தம்:- அன்திம் பன்ஹால் (இந்தியா)- ஜெய்னெப் யெட்கில் (துருக்கி), (பெண்களுக்கான 53 கிலோ பிரீஸ்டைல் கால்இறுதிக்கு முந்தைய சுற்று), பிற்பகல் 2 30 மணி. வினேஷ் போகத் (இந்தியா)-சாரா ஹில்டுபிரான்டு(அமெரிக்கா) (பெண்களுக்கான 50 கிலோ பிரீஸ்டைல் இறுதிப்போட்டி), நள்ளிரவு 12 மணி.
பளுதூக்குதல்:- மீராபாய் சானு (பெண்கள் 49 கிலோ எடைப்பிரிவு) இரவு 11 மணி.