பாரீஸ் ஒலிம்பிக்: இந்திய ஆண்கள் ஆக்கி அணி அறிவிப்பு

பாரீஸ் ஒலிம்பிக் தொடருக்கான இந்திய ஆண்கள் ஆக்கி அணி அறிவிக்கப்பட்டுள்ளது.;

Update:2024-06-26 17:54 IST

Image Courtesy : @asia_hockey twitter

புதுடெல்லி,

பிரான்ஸ் தலைநகரான பாரீசில் வரும் ஜூலை 26 -ம் தேதி முதல் ஆகஸ்ட் 11-ம் தேதி வரை ஒலிம்பிக் போட்டி நடைபெறுகிறது. இந்நிலையில், பாரீஸ் ஒலிம்பிக் தொடருக்கான 16 பேர் கொண்ட இந்திய ஆண்கள் ஆக்கி அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அணிக்கு ஹர்மன்பிரீத் சிங் கேப்டனாகவும், ஹர்திக் சிங் துணை கேப்டனாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்த அணியில் 5 வீரர்கள் முதல் முறையாக ஒலிம்பிக் தொடருக்கான அணிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

இந்திய அணி ஜூலை 27-ம் தேதி தனது முதல் போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது. ஜப்பானின் டோக்கியோவில் கடந்த முறை நடந்த ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஆண்கள் அணி வெண்கலப் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

இந்திய ஆக்கி அணி விவரம்:

கோல்கீப்பர்: ஸ்ரீஜேஷ் பரட்டு ரவீந்திரன்

டிபெண்டர்கள்: ஜர்மன்பிரீத் சிங், அமித் ரோஹிதாஸ், ஹர்மன்பிரீத் சிங், சுமித், சஞ்சய்

மிட்பீல்டர்கள்: ராஜ்குமார் பால், ஷம்ஷேர் சிங், மன்பிரீத் சிங், ஹர்திக் சிங், விவேக் சாகர் பிரசாத்

முன்கள வீரர்கள்: அபிஷேக், சுக்ஜீத் சிங், லலித் குமார் உபாத்யாய், மந்தீப் சிங், குர்ஜந்த் சிங்

மாற்று வீரர்கள்: நீலகண்ட சர்மா, ஜுக்ராஜ் சிங், கிரிஷன் பகதூர் பதக்.

Tags:    

மேலும் செய்திகள்