ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்; ஐதராபாத் - மோகன் பகான் அணிகள் இன்று மோதல்

11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

Update: 2024-10-30 01:50 GMT

image courtesy: @mohunbagansg

ஐதராபாத்,

13 அணிகள் இடையிலான 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் தற்போது லீக் சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த தொடரில் கடந்த இரு நாட்கள் ஓய்வு நாளாகும்.

இதையடுத்து இந்த தொடரில் ஐதராபாத்தில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் ஐதராபாத் எப்.சி - மோகன் பகான் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோத உள்ளன. இந்த் தொடரில் இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் புள்ளிப்பட்டியலில் மோகன் பகான் அணி 3வது இடத்திலும், ஐதராபாத் அணி 11வது இடத்திலும் உள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்