ஐ.எஸ்.எல்.கால்பந்து: பஞ்சாப் - மோகன் பகான் அணிகள் நாளை மோதல்

டெல்லியில் நாளை நடைபெற உள்ள ஆட்டத்தில் பஞ்சாப் - மோகன் பகான் அணிகள் மோதுகின்றன.

Update: 2024-12-25 16:22 GMT

புதுடெல்லி, 

13 அணிகள் பங்கேற்றுள்ள 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் நேற்றும் இன்றும் ஓய்வு நாளாகும். இந்த நிலையில் , டெல்லியில் நாளை நடைபெற உள்ள ஆட்டத்தில் பஞ்சாப் - மோகன் பகான் அணிகள் மோதுகின்றன.

இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் புள்ளிப்பட்டியலில் மோகன் பகான் முதல் இடத்திலும், பஞ்சாப் 7வது இடத்திலும் உள்ளன. 

Tags:    

மேலும் செய்திகள்