தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடருக்கு பின் கேப்டன் பதவியில் இருந்து விலகும் ஷாண்டோ...?

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி வங்காளதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது.

Update: 2024-10-27 07:22 GMT

Image Courtesy: AFP

டாக்கா,

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி வங்காளதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இந்த தொடரில் ஒரு ஆட்டம் முடிந்துள்ள நிலையில், அந்த ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்று 1-0 என முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி வரும் 29ம் தேதி தொடங்க உள்ளது.

வங்காளதேச அணியின் கேப்டனாக (மூன்று வடிவத்திற்கும் டெஸ்ட்+ ஒருநாள் + டி20) நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடருக்கு பின் கேப்டன் பதவியில் இருந்து நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ விலக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடர் வெற்றிக்கு பின் தொடர் தோல்விகளை சந்தித்து வருவதால் ஷாண்டோ இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், இது தொடர்பாக அறிவிப்பு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடருக்கு பின் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்