சர்பராஸ், அஸ்வின் இல்லை... முதல் போட்டிக்காக தான் தேர்வு செய்த ஆடும் அணியை அறிவித்த சஞ்சய் மஞ்ரேக்கர்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டிக்காக தான் தேர்வு செய்த ஆடும் இந்திய அணியை சஞ்சய் மஞ்ரேக்கர் அறிவித்துள்ளார்.

Update: 2024-11-21 04:26 GMT

மும்பை,

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

இதன்படி இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பெர்த்தில் இந்திய நேரப்படி நாளை (வெள்ளிக்கிழமை) காலை 7.50 மணிக்கு தொடங்குகிறது.

இந்நிலையில் இந்த முதல் போட்டிக்கான தான் தேர்வு செய்த இந்திய அணியின் ஆடும் அணியை (பிளேயிங் 11) முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் வெளியிட்டுள்ளார். அதில் சர்பராஸ் கான், அஸ்வினை தேர்ந்தெடுக்காத அவர் வாஷிங்டன் சுந்தர் மற்றும் அபிமன்யு ஈஸ்வரனை தேர்ந்தெடுத்துள்ளார்.

சஞ்சய் மஞ்ரேக்கர் தேர்ந்தெடுத்த பிளேயிங் 11 பின்வருமாறு:-

அபிமன்யு ஈஸ்வரன், ஜெய்ஸ்வால், துருவ் ஜுரேல், விராட் கோலி, ரிஷப் பண்ட், கேஎல் ராகுல், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரித் பும்ரா (கேப்டன்), முகமது சிராஜ், ஆகாஷ் தீப்.

Tags:    

மேலும் செய்திகள்