ஐ.பி.எல்.2025: கேப்டன் பதவியிலிருந்து விலகும் கே.எல். ராகுல்..? வெளியான தகவல்

ஐ.பி.எல். தொடரில் லக்னோ அணியின் கேப்டனாக கே.எல்.ராகுல் உள்ளார்.

Update: 2024-08-27 12:31 GMT

image courtesy: AFP

கொல்கத்தா,

அடுத்த ஆண்டு ஐ.பி.எல். தொடருக்கான மெகா ஏலம் இந்த ஆண்டு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு ஒவ்வொரு அணியிலும் ஏராளமான மாற்றங்கள் நடந்து வருகின்றன. ஏற்கனவே கொல்கத்தா அணியின் பயிற்சியாளர்கள் குழுவில் இருந்த கவுதம் கம்பீர், அபிஷேக் நாயர், ரியான் டென் டஸ்காட்டே உள்ளிட்டோர் இந்திய அணிக்கு சென்றுள்ளனர்.

அதேபோல் குஜராத் அணியின் பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ராவும் அதிலிருந்து வெளியேற உள்ளதாக கூறப்பட்டுள்ளது. டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து ரிக்கி பாண்டிங் நீக்கப்பட்டது என இப்போதே அடுத்த சீசன் விறுவிறுப்பை எகிற வைத்துள்ளது.

முன்னதாக கடந்த ஐ.பி.எல். தொடரின்போது லக்னோ அணி மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி தோல்வியை சந்தித்த வேளையில் அந்த அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா அணியின் கேப்டன் கே.எல் ராகுலை மைதானத்திலேயே கடுமையாக பேசியிருந்தார். அது குறித்த வீடியோவும் வெளியாகி அனைவரது மத்தியிலும் விமர்சனத்தை ஏற்படுத்தி இருந்தது.

இதனால் எதிர்வரும் 2025-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அவர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்காக விளையாடுவாரா? அல்லது அந்த அணியிலிருந்து விலகுவாரா? என்றெல்லாம் கூட கேள்விகள் எழுந்தன.

இந்நிலையில் கே.எல். ராகுல் தொடர்ந்து லக்னோ அணியில் இடம்பெற்று விளையாட இருப்பது உறுதியாகியுள்ளது. ஆனாலும் அவர் ஒரு நிபந்தனையுடன் அந்த அணியில் நீடிப்பார் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் இனிதான் லக்னோ அணிக்கு கேப்டனாக இருக்க மாட்டேன் என்றும் ஒரு முழு நேர பேட்ஸ்மேனாக மட்டுமே விளையாட போவதாக உரிமையாளரிடம் கே.எல். ராகுல் கூறியதாக கூறப்படுகிறது.

அதற்கு லக்னோ அணியின் உரிமையாளரும் சம்மதம் தெரிவித்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்