சர்வதேச மாஸ்டர்ஸ் லீக்; இலங்கையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது வெஸ்ட் இண்டீஸ்

நாளை ராய்பூரில் நடைபெறும் இறுதி ஆட்டத்தில் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோத உள்ளன.;

Update:2025-03-15 02:52 IST
சர்வதேச மாஸ்டர்ஸ் லீக்; இலங்கையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது வெஸ்ட் இண்டீஸ்

image courtesy:twitter / @imlt20official

ராய்பூர்,

முதலாவது சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் தொடரில் ராய்பூரில் நேற்று நடைபெற்ற 2வது அரையிறுதி ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் - இலங்கை அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட்டை மட்டும் இழந்து 179 ரன்கள் எடுத்தது.

வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அதிகபட்சமாக ராம்டின் 50 ரன்கள் எடுத்தார். இலங்கை தரப்பில் பிரதீப், மெண்டிஸ், குணரத்னே தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து 180 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் கண்ட இலங்கை வெஸ்ட் இண்டீஸின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 20 ஓவர்களில் 9 விக்கெட்டை இழந்து 173 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதன் மூலம் 6 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் டினோ பெஸ்ட் 4 விக்கெட் வீழ்த்தினார். நாளை ராய்பூரில் நடைபெறும் இறுதி ஆட்டத்தில் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோத உள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்