இங்கிலாந்து வெற்றி: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் அணிகளின் நிலை என்ன..?
இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.;
லண்டன்,
இங்கிலாந்து - இலங்கை இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி நேற்று நிறைவடைந்தது. இதில் 190 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) வெளியிட்டுள்ளது. அதில் முதல் 4 இடங்களில் முறையே இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் மாற்றமின்றி தொடருகின்றன. இதில் இங்கிலாந்து அணி கூடுதல் புள்ளிகள் பெற்று 3-வது இடத்தில் உள்ள நியூசிலாந்து அணியை நெருங்கியுள்ளது.
தோல்வியை தழுவிய இலங்கை 5-வது இடத்தில் இருந்து 7-வது இடத்திற்கு சரிந்துள்ளது. 7-வது இடத்தில் இருந்த தென் ஆப்பிரிக்கா 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. மற்ற அணிகள் மாற்றமின்றி அதே இடத்தில் தொடருகின்றன.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல் விவரம்;
1.) இந்தியா - 68.52 சதவீதம்
2.) ஆஸ்திரேலியா - 62.50 சதவீதம்
3.) நியூசிலாந்து - 50.00 சதவீதம்
4.) இங்கிலாந்து - 45.00 சதவீதம்
5.) தென் ஆப்பிரிக்கா - 38.89 சதவீதம்
6.) வங்காளதேசம் - 35.00 சதவீதம்
7.) இலங்கை - 33.33 சதவீதம்
8.) பாகிஸ்தான் - 22.22 சதவீதம்
9.) வெஸ்ட் இண்டீஸ் - 18.52 சதவீதம்