நிகழ்ச்சி மேடையில் பெங்களூரு ரசிகர்களை கலாய்த்த சென்னை கேப்டன் கெய்க்வாட்.. என்ன நடந்தது..?

ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் உள்ளார்.

Update: 2024-12-20 13:08 GMT

image courtesy: AFP

பெங்களூரு,

இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல். -க்கு உலக கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு உள்ளது. பல வெளிநாட்டு அணிகளின் நட்சத்திர வீரர்கள் இதில் கலந்துகொண்டு விளையாடுவது சிறப்பம்சமாகும். இதுவரை 17 ஐ.பி.எல். சீசன்கள் நிறைவடைந்துள்ளன. 18-வது சீசன் அடுத்தாண்டு நடைபெற உள்ளது.

இதில் அதிகபட்சமாக மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் தலா 5 முறை கோப்பையை வென்றுள்ளன. விராட் கோலி உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் அடங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 17 சீசன்களாக ஒரு கோப்பையை கூட வெல்லவில்லை என்றாலும் ரசிகர்கள் மத்தியில் செல்வாக்கு மிகுந்த அணிகளில் ஒன்றாக உள்ளது.

இதில் கடந்த சீசனில் வருங்காலத்தை கருத்தில் கொண்டு சென்னை அணியின் கேப்டன் பொறுப்பை ருதுராஜ் கெய்க்வாட் கையில் ஒப்படைத்த மகேந்திரசிங் தோனி சாதாரண வீரராக விளையாடி வருகிறார். எனினும் புதிய கேப்டன் கெய்க்வாட் தலைமையில் விளையாடிய சென்னை அணி கடந்த சீசனில் லீக் சுற்றோடு வெளியேறியது.

இந்நிலையில் பெங்களூருவில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் ருதுராஜ் கெய்க்வாட் பங்கு பெற்றார். அப்போது ருதுராஜ் பேசும்போது அவருடைய மைக் ஆப் செய்யப்பட்டது. இதனை அடுத்து மேடையில் இருந்த தொகுப்பாளர் ருதுராஜ் பேசும்போது அவருடைய மைக்கை ஆப் செய்தது யார்? என்று கேட்டார்.

இதற்கு உடனடியாக பதில் அளித்த ருதுராஜ், 'ஆர்சிபி ரசிகர்கள் யாராவது இதை செய்திருக்கலாம்' என்று கலாய்த்தார். உடனே அங்கு இருந்த ரசிகர்கள் அனைவரும் சிரித்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.

முன்னதாக கடந்த சீசனில் முக்கியமான லீக் போட்டியில் சென்னையை தோற்கடித்து பெங்களூரு அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது. இதனால் பெங்களூரு அணியின் அந்த வெற்றியை ரசிகர்களும் வீரர்களும் வெறித்தனமாக கொண்டாடினர். இதனை மனதில் வைத்து ருதுராஜ் மேடையில் அவ்வாறு பேசியதாக ஆர்சிபி ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்