பாரீஸ் ஒலிம்பிக்: ஆஸ்திரேலிய வீராங்கனைக்கு கொரோனா பாதிப்பு

ஒலிம்பிக் கிராமத்தில் கொரோனா பாதிப்பு தலைதூக்கி இருக்கிறது.

Update: 2024-07-23 22:09 GMT

பாரீஸ்,

பாரீஸ் ஒலிம்பிக் போட்டி தொடங்க இன்னும் 2 நாட்கள் இருக்கும் நிலையில் வீரர், வீராங்கனைகள் தங்கும் ஒலிம்பிக் கிராமத்தில் கொரோனா பாதிப்பு தலைதூக்கி இருக்கிறது. ஆஸ்திரேலிய பெண்கள் வாட்டர் போலோ அணி வீராங்கனை ஒருவர் உடல் நிலை பாதிக்கப்பட்டதை தொடர்ந்து நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் தனிமைப் படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவரது பெயர் விவரம் எதுவும் வெளியிடப்படவில்லை.

இது குறித்து ஆஸ்திரேலிய ஒலிம்பிக் அணியின் தலைவர் அன்னா மியர்ஸ் நேற்று கூறுகையில், 'எங்களது வாட்டர் போலோ வீராங்கனை ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது முந்தைய நாள் இரவு தெரியவந்தது. இதனால் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். தனி அறையில் தங்கி இருந்தாலும், பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். அவர் போட்டியில் பங்கேற்பது குறித்து உடல் தகுதி சோதனைக்கு பிறகு முடிவு செய்யப்படும்' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்