'நம்பர் ஒன்' டென்னிஸ் வீரர் சினெர் ஒலிம்பிக்கில் இருந்து விலகல்
‘நம்பர் ஒன்’ டென்னிஸ் வீரர் ஜானிக் சினெர் ஒலிம்பிக்கில் இருந்து விலகியுள்ளார்.
பாரீஸ்,
பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் டென்னிஸ் பந்தயம் நாளை மறுதினம் தொடங்க இருக்கிறது. இந்த நிலையில் ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனும், 'நம்பர் ஒன்' டென்னிஸ் வீரருமான ஜானிக் சினெர் (இத்தாலி) திடீரென ஒலிம்பிக்கில் இருந்து விலகி இருக்கிறார்.
கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், டாக்டர்கள் அறிவுறுத்தலின் பேரில் துரதிர்ஷ்டவசமாக இந்த ஒலிம்பிக்கில் பங்கேற்க இயலாமல் போவதாகவும் அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.