ஓடிடியில் வெளியான டிரிக்கர் வார்னிங், கேங்ஸ் ஆப் கோதாவரி

அஞ்சலி நடித்த 'கேங்ஸ் ஆப் கோதாவரி' படம் கடந்த மாதம் 31-ம் தேதி வெளியானது.

Update: 2024-06-29 04:01 GMT

சென்னை,

விஸ்வக் சென் நடிப்பில் கிருஷ்ண சைதன்யா இயக்கிய படம் 'கேங்ஸ் ஆப் கோதாவரி'. இதில் அஞ்சலி, நேஹா ஷெட்டி உள்ளிடோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

திருட்டு தொழிலில் ஈடுபட்டு மது, மாது, சூது என வாழ்க்கையை நாயகன் ஓட்டி வருகிறான். இந்தநிலையில் அவனுக்கு அரசியலில் சாதிக்க வேண்டும் என எண்ணம் தோன்றுகிறது.

ஒருபக்கம் எதிரிகள் அதிகரிக்க எம்.எல்.ஏ ஒருவரிடம் அடியாளாக சேர்ந்து விசுவாசியாக மாறுகிறான். அதன்பின்னர் அவன் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் தொடர்பானது இக்கதை . இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழில் வெளியாகி உள்ளது.

ஜெசிகா அல்பா, மார்க் வெப்பர், ஆண்டனி மைக்கேல் ஹால் ஆகியோர் நடிப்பில் வெளியான படம் டிரிக்கர் வார்னிங். ராணுவத்தில் சிறப்பு கமாண்டோ வீரராக நாயகி பணிபுரிகிறார். கிராமத்தில் தனது தந்தை இறந்ததை அறிந்து ஊருக்கு திரும்புகிறார்.

அங்கே தனது தந்தையின் கொலையில் சதி இருப்பதையும் ஊருக்கு அசம்பாவிதம் நிகழப்போவதையும் அறிகிறார். எதிரிகளை துவம்சம் செய்து ஊரை நாயகி காப்பாற்றுவது தொடர்பான கதை. இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழில் வெளியாகி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்