யோகி பாபுவின் 'சட்னி சாம்பார்' தொடர் - ஓடிடி குறித்த அறிவிப்பு

நடிகர் யோகி பாபு நடிக்கும் 'சட்னி சாம்பார்' தொடர் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட உள்ளது.

Update: 2024-07-01 09:05 GMT

சென்னை,

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் யோகிபாபு. இவர் நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா, மண்டேலா, ஜெய்லர் உள்ளிட்ட திரைப்படங்கள் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றன.

இதனைத் தொடர்ந்து கடந்த வருடம் அட்லீ இயக்கத்தில் வெளியான 'ஜவான்' படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். மேலும் சமீபத்தில் வெளியான குருவாயூர் அம்பலநடையில் படத்தில் நடித்து மலையாளத்திலும் அறிமுகமானார்.

இந்த நிலையில் யோகி பாபு தற்போது, 'சட்னி சாம்பார்' என்ற தொடரிலும் நடித்து வருகிறார். இந்த தொடரில் அவர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். வாணி போஜன், மைனா நந்தினி, தீபா சங்கர், சம்யுக்தா விஸ்வநாத் , அகிலன் மற்றும் கேசவ் ராஜ் ஆகியோரும் இதில் நடிக்கின்றனர். இந்தத் தொடரை இயக்குனர் ராதாமோகன் இயக்குகிறார்.

இந்த நிலையில், சட்னி சாம்பார் தொடர் ஓடிடியில் வெளியாவது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த தொடர் விரைவில் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்