'அமரன்' ஓ.டி.டி ரிலீஸில் திடீர் மாற்றம்

ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ள 'அமரன்' படம் தற்போது வரை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Update: 2024-11-12 05:51 GMT

சென்னை,

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து தீபாவளி பண்டிகையில் வெளியான படம் 'அமரன்'. ராஜ்கமல் பிலிம்ஸ் இப்படத்தை தயாரித்துள்ள நிலையில் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். மறைந்த முன்னாள் ராணுவ வீரர் மேஜர் முகுந்தின் வாழ்க்கையைத் தழுவி இப்படம் உருவாகியுள்ளது. இதில் சிவகார்த்திகேயன் மேஜர் முகுந்தாகவும், முகுந்தின் மனைவி இந்துவாக நடிகை சாய் பல்லவியும் நடித்துள்ளனர்.

உலகளவில் சுமார் 900-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது. தொடர்ந்து, பல்வேறு பிரபலங்களின் பாராட்டுகளை இப்படம் பெற்று வருகிறது. படத்தில் இடம்பெற்ற சண்டை மற்றும் காதல் காட்சிகள் ரசிகர்களைக் கவர்ந்துள்ளன.அமரன் திரைப்படம் உலகளவில் முதல் நாளில் ரூ.42.3 கோடியை வசூலித்துள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்தது. சிவகார்த்திகேயன் நடித்த படங்களிலேயே முதல் நாளில் பெரிய வசூலைப் பெற்ற திரைப்படம் இதுதான். மேலும், ரசிகர்களிடம் கிடைத்த வரவேற்பால் இப்படம் உலகளவில் ரூ.200 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது.

இந்த படத்தை அனைவரும் பாராட்டி வருகின்றனர். இதற்கிடையில் இந்த படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியானது. அதன்படி இப்படமானது வருகிற டிசம்பர் மாதம் முதல் வாரம் அல்லது இரண்டாவது வாரத்தில் நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இதுவரை அமரன் படத்திற்கு டிக்கெட்டிற்கு டிமாண்ட் அதிகமாக இருந்து வருகின்றது. எனவே நெட்பிலிக்ஸ் நிறுவனம் அமரன் படத்தின் ஓ.டி.டி ரிலீஸை தள்ளி வைத்துள்ளது. இதுபோல வேறெந்த தமிழ் படத்திற்கும் இதுவரை நடந்ததே இல்லை என்று கூறப்படுகிறது. 

 

Tags:    

மேலும் செய்திகள்