டிரம்பை கொல்ல சதி - ஈரானை சேர்ந்தவர் மீது அமெரிக்கா குற்றச்சாட்டு

அமெரிக்காவின் 47வது அதிபராக டிரம்ப் தேர்வாகி உள்ளார்.

Update: 2024-11-09 07:21 GMT

வாஷிங்டன்,

அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸை தோற்கடித்து, 2வது முறையாக அதிபராக டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். இதன்மூலம், அமெரிக்காவின் 47வது அதிபராக ட்ரம்ப் தேர்வாகி உள்ளார். பிரசார களத்தில் கடும் நெருக்கடியை சந்தித்த தருணத்தில் டிரம்ப் மீது துப்பாக்கி சூடு நடைபெற்றது. டிரம்ப் மேடையில் பேசிக் கொண்டு இருந்த போது திடீரென வந்த துப்பாக்கி குண்டு அவரது காதின் மேல்பகுதியை உரசிச் சென்றது. அதன் பின்னர் புளோரிடா மாகாணத்தில் கோல்ப் மைதான கிளப்பில் டிரம்ப் விளையாடிக் கொண்டிருந்த போது, மர்ம நபர் துப்பாக்கி சூடு நடத்தினார். அப்போதும் டிரம்ப் உயிர் தப்பினார்.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன்னதாக டொனால்டு டிரம்பை கொலை செய்ய திட்டமிட்டதாக கூறி, ஈரானின் துணை ராணுவ குழு உறுப்பினர் ஒருவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இது குறித்து அமெரிக்க நீதித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன்னதாக டொனால்டு டிரம்பை கொலை செய்ய திட்டமிட்டதாக ஈரானின் துணை ராணுவ குழு உறுப்பினர் ஒருவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. அந்த நபர் கைது செய்யப்படவில்லை. அவர் இன்னும் ஈரானில் இருப்பதாக நம்பப்படுகிறது. ஈரானுக்கு எதிராக நாங்கள் நடவடிக்கை எடுப்போம். அமெரிக்க மக்களையும், அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பையும் ஆபத்தில் ஆழ்த்த முயற்சி நடக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்