தென்கொரியாவுக்கு குப்பை பலூன்களை அனுப்பி வடகொரியா மீண்டும் அடாவடி

தென்கொரியாவுக்கும் வடகொரியாவுக்கும் பல ஆண்டுகளாகவே தீராப்பகை இருந்து வருகிறது.

Update: 2024-10-24 07:55 GMT

சியோல்,

வடகொரியாவுக்கும் தென்கொரியாவுக்கும் பல வருடங்களாக மோதல் போக்கு நீடித்து வருகிறது. இதனால், தென்கொரியாவை அச்சுறுத்தும் விதமாக அவ்வப்போது ஏவுகணை சோதனைகளில் வடகொரியா ஈடுபட்டு வருகிறது. வடகொரியாவின் அச்சுறுத்தலை அமெரிக்காவுடன் இணைந்து சமாளித்து வரும் தென்கொரியா, அந்நாட்டிற்கு தக்க பதிலடியும் கொடுத்து வருகிறது. இதனால், கொரிய தீபகற்பத்தில் தொடர்ந்து பதற்றமான சூழலே நிலவி வருகிறது.

இந்த நிலையில், கடந்த 9-ஆம் தேதியன்று இரவில் 300-க்கும் அதிகமான பலூன்களில் குப்பைகள் அடங்கிய பைகளை தொங்கவிட்டு, அவற்றை தென் கொரிய எல்லைக்குள் வடகொரியா பறக்க விட்டு பரபரப்பை ஏற்ப்டுத்தியது. இந்த சம்பவம் நடைபெற்று ஒரு சில வாரங்களில் மீண்டும் தனது அடாவடி நடவடிக்கையை வடகொரியா தொடங்கியுள்ளது.

குப்பை நிரப்பிய பலூன்களை நேற்று வடகொரியா அனுப்பியுள்ளது. வடகொரியாவின் இந்த குப்பை பலூன்கள், தென்கொரியாவின் தலைநகர் சியோலில் உள்ள அதிபர் மாளிகை வளாகத்திற்குள் விழுந்துள்ளது. உடனடியாக அந்த பலூன்களை பாதுகாப்புக்கு இருந்த ஊழியர்கள் கைப்பற்றினர். இந்த பலூன்களுக்குள் ஆபத்தான எதுவும் இல்லை எனவும் தென்கொரிய பாதுகாப்பு அதிகாரிகள் கூறியுள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்