கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை: வட கொரியாவுக்கு தைவான் கண்டனம்

வடகொரியாவின் ஏவுகணை சோதனைக்கு தைவான் கண்டனம் தெரிவித்துள்ளது.

Update: 2024-10-31 21:00 GMT

Photo Credit: AFP

தைபே,

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை வடகொரியா நடத்தி உள்ளது. இது உலக நாடுகள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வடகொரியாவின் பாதுகாப்பு கருதியும், தங்கள் நாட்டின் எதிரிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக இந்த சோதனையை நடத்தி இருப்பதாக வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் வடகொரியாவின் இந்த ஏவுகணை சோதனைக்கு தைவான் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தைவான் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'வடகொரியாவின் செயல் தேவையற்ற ஒன்றாகும்.

இது மக்கள் இடையேயும், நாடுகளுக்கு இடையேயும் அமைதியை சீர்குலைக்கும். குறிப்பாக இந்தோ-பசிபிக் மண்டலத்தில் உள்ல நாடுகளிடையே அமைதி, நிலைத்தன்மை உள்ளிட்டவற்றை சீர்குலைக்கும். தைவான் அனைத்து நாடுகளுடனும் இணைந்து சுதந்திரமாகவும், வெளிப்படையாகவும் செயல்பட விரும்புகிறது' என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல ஜப்பானும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்