இந்துஜா குடும்பத்தினருக்கு சிறை தண்டனை- சுவிட்சர்லாந்து கோர்ட்டு அதிரடி

வேலைக்கு அழைத்து வருபவர்களின் பாஸ்போர்ட்டுகளை வாங்கி வைத்துக்கொண்டு மிரட்டி வேலை வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

Update: 2024-06-21 16:33 GMT

பிரகாஷ் இந்துஜா

ஜெனிவா:

உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான இந்துஜா குழுமத்தின் தலைவர் பிரகாஷ் இந்துஜா, அவரது மனைவி கமால் இந்துஜா, மகன் அஜய் மற்றும் மருமகள் நம்ரதா ஆகியோர் சுவிட்சர்லாந்தில் வசிக்கின்றனர்.

இவர்கள் இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக வேலையாட்களை அழைத்து வந்து தங்கள் வீட்டில் பணியமர்த்தி வருவதாகவும், அவர்களுக்கு குறைந்த ஊதியம் வழங்கி அதிக நேரம் வேலை செய்யும்படி மிரட்டுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. வேலைக்கு அழைத்து வருபவர்களின் பாஸ்போர்ட்டுகளையும் வாங்கி வைத்துக்கொண்டு மிரட்டி வேலை வாங்கியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக சுவிட்சர்லாந்து கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில், மனித கடத்தல் தொடர்பான குற்றச்சாட்டில் இந்து இந்துஜா குழும தலைவரான பிரகாஷ் இந்துஜா விடுவிக்கப்பட்டார். ஆனால், பிற குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் தண்டனை வழங்கப்பட்டது. பிரகாஷ் இந்துஜா (வயது 78), அவரது மனைவி கமால் இந்துஜா (வயது 75) ஆகியோருக்கு தலா நான்கரை ஆண்டுகளும், மகன், மருமகள் ஆகியோருக்கு தலா நான்கு ஆண்டுகளும் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்