நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு இலங்கை அதிபர் இந்தியா வருகை

இலங்கை நாடாளுமன்ற தேர்தல் நவ.14ம் தேதி நடைபெற உள்ளது;

Update:2024-10-15 16:20 IST

கொழும்பு,

இலங்கையில் கடந்த மாதம் 21 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் அனுரகுமரா திசநாயகே வெற்றி பெற்றார். இலங்கை அதிபராக பொறுப்பேற்ற பிறகு தனது முதல் வெளிநாடு பயணமாக இந்தியாவுக்கு வருகை தர திசநாயகே திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் அதிபர் அனுரகுமரா திசநாயகேவின் டெல்லி பயணம் இந்த ஆண்டு நவம்பர் மாதத்திற்குப் பிறகுதான் நடக்கும் என்று அந்நாட்டு வெளியுறவுத்துறை மந்திரி விஜிதா ஹேரத் தெரிவித்துள்ளார்.

இலங்கை நாடாளுமன்ற தேர்தல் நவ.14ம் தேதி நடைபெற உள்ளது. அதில் நாங்கள் புதிய அரசாங்கத்தை அமைத்த பின்னரே பயணம் குறித்த தேதிகளை விவாதிப்போம் என்று ஹேரத் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்