பாரீஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்க 2 நாடுகளுக்கு தடை: காரணம் இதுதான்

கோலாகலமாக தொடங்கிய ஒலிம்பிக் போட்டி ஆகஸ்ட் 11-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

Update: 2024-07-28 14:20 GMT

பாரீஸ்,

33-வது ஒலிம்பிக் விளையாட்டு திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நேற்று முன்தினம் இரவு கோலாகலமாக தொடங்கியது. 128 ஆண்டு கால ஒலிம்பிக் வரலாற்றில் முதல்முறையாக ஒலிம்பிக் தொடக்க விழாவை ஸ்டேடியத்தில் இல்லாமல், நகரின் மையப்பகுதியில் உள்ள சென் நதியில் நடைபெற்றது.

ஜூலை 26ஆம் தேதி துவங்கிய இந்த, பாரிஸ் ஒலிம்பிக் தொடரானது ஆகஸ்ட் 11ஆம் தேதிவரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒலிம்பிக் போட்டியில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இந்தநிலையில், பாரீஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்க இரண்டு நாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. உக்ரைனுக்கு எதிரான போரில் ஈடுபடுவதால், ரஷியாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ரஷியாவுக்கு ஆதரவாக இருந்து, உக்ரன் போருக்கு உதவும் பெலாரஸ் நாட்டிற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தாண்டு பிற்பகுதியில் நடைபெறவுள்ள பாரா ஒலிம்பிக்கிலும் இந்த இருநாட்டை சேர்ந்த வீரர், வீராங்கனைகளும் பங்கேற்க வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.

பாரீஸ் ஒலிம்பிக் துவங்குவதற்கு, ஒரு வாரத்திற்கு முன் அமைதிப் பேச்சு வார்த்தையை ரஷியா துவங்க வேண்டும் என சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி நிபந்தனை விதித்து இருந்தது. ஆனால், அதனை ரஷியா ஏற்கவில்லை. இதனால்தான், வேறு வழியில்லாமல் ரஷியாவை புறக்கணித்து உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இதே காரணத்துக்காக பெலாரஸ் நாட்டையும் தடை செய்துவிட்டதாக கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்