ஹிஸ்புல்லாவின் 3 முக்கிய அதிகாரிகளை காலி செய்த இஸ்ரேல்: 100 ராக்கெட்டுகளை ஏவி ஹிஸ்புல்லா பதிலடி
ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய அதிகாரிகள் 3 பேர் கொல்லப்பட்ட நிலையில், பதிலடியாக ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீது 100 ராக்கெட்டுகளை ஏவியுள்ளது.;
ஜெருசலேம்,
லெபனானின் பெய்ரூட் நகரின் தெற்கு பகுதியில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பின் உளவுப்பிரிவு தலைமையகத்தின் மீது இஸ்ரேல் ராணுவம் இன்று நடத்திய தாக்குதலில், அதன் முக்கிய அதிகாரிகள் 3 பேர் கொல்லப்பட்டனர். இதன்படி, எல்ஹாக் அப்பாஸ் சலாமே, ராச்சா அப்பாஸ் இச்சா மற்றும் அகமது அலி ஹசின் ஆகியோர் பலியானார்கள்.
இதேபோன்று தாக்குதலில், நிலத்திற்கு அடியில் செயல்பட்டு வந்த ஆயுத தொழிற்சாலை ஒன்றும் சேதமடைந்தது. இஸ்ரேலின் இந்த தாக்குதலுக்கு, பதிலடியாக ஹிஸ்புல்லா அமைப்பு 100 ராக்கெட்டுகளை ஏவியுள்ளது. அடுத்தடுத்து நடந்த இந்த தொடர் தாக்குதலால் வடக்கு இஸ்ரேல் பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டு உள்ளது. அதனை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு உள்ளனர்.