தாய்லாந்தில் மேம்பாலம் இடிந்து விபத்து - 5 பேர் பலி

கட்டுமான பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு கொண்டிருந்தபோது திடீரென பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.;

Update:2025-03-15 22:53 IST
தாய்லாந்தில் மேம்பாலம் இடிந்து விபத்து -  5 பேர் பலி

பாங்காக்,

தாய்லாந்து தலைநகர் பாங்காக் நெடுஞ்சாலை மிகவும் பரபரப்பான சாலை ஆகும். எனவே போக்குவரத்து நெரிசலை சமாளிக்க அங்கு புதிதாக மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. அதன்படி இந்த மேம்பாலம் கட்டுமான பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது திடீரென பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.

இந்த விபத்தில் என்ஜினீயர் உள்பட 5 பேர் உடல் நசுங்கி பலியாகினர். மேலும் 24 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. மீட்பு படையினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். மேலும் இந்த சம்பவத்தால் நெடுஞ்சாலை மூடப்பட்டு சில மணி நேரம் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இடிபாடுகள் அகற்றப்பட்ட பிறகே அங்கு மீண்டும் போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பியது.

 

Tags:    

மேலும் செய்திகள்